தமிழக செய்திகள்

உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு: தமிழகத்தில் இதுவரை 34½ லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 43 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று 68 ஆயிரத்து 301 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 3,518 ஆண்கள், 2,372 பெண்கள் என மொத்தம் 5,890 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், வெளிநாடுகளில் இருந்து வந்த ஒருவரும், வெளிமாநிலங்களில் இருந்து வந்த 27 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 258 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 786 முதியவர்களும் அடங்குவர். நேற்று அனைத்து மாவட்டங்களிலும் புதிதாக தொற்று ஏற்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1,187 பேரும், திருவள்ளூரில் 495 பேரும், செங்கல்பட்டில் 437 பேரும், குறைந்தபட்சமாக கரூரில் 14 பேரும், கிருஷ்ணகிரியில் 12 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இதுவரை 34 லட்சத்து 43 ஆயிரத்து 897 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 245 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த பட்டியலில் 1 லட்சத்து 96 ஆயிரத்து 744 ஆண்களும், 1 லட்சத்து 29 ஆயிரத்து 472 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 29 பேரும் அடங்குவர். அதில் 12 வயதுக்கு உட்பட்ட 15 ஆயிரத்து 872 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 41 ஆயிரத்து 600 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 83 பேரும், தனியார் மருத்துவமனையில் 34 பேரும் என 117 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். இதில் சென்னையில் 25 பேரும், கோவை, திருவள்ளூர், திருவண்ணாமலையில் தலா 8 பேரும், செங்கல்பட்டில் 6 பேரும், கன்னியாகுமரியில் 5 பேரும், கடலூர், தென்காசி, நெல்லை, வேலூரில் தலா 4 பேரும், திருப்பூர், சிவகங்கை, சேலம், ராணிப்பேட்டை, திண்டுக்கலில் தலா 3 பேரும், காஞ்சீபுரம், கரூர், தஞ்சாவூர், திருப்பத்தூர், விருதுநகரில் தலா இருவரும், தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, மதுரை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, ஈரோடு, அரியலூரில் தலா ஒருவரும் என 29 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. இதுவரை தமிழகத்தில் 5,514 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5 ஆயிரத்து 556 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சென்னையில் 7 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

சென்னையில் கடந்த 7 நாட்களாக கொரோனா பாதிப்பு ஆயிரத்துக்கும் குறைவாகவே இருந்து வந்தது. நேற்று மீண்டும் ஆயிரத்தை கடந்தது. நேற்று 1,187 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இதுவரை 1 லட்சத்து 14 ஆயிரத்து 260 பேர் கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர். இதில் 1 லட்சத்து 643 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2 ஆயிரத்து 408 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 11 ஆயிரத்து 209 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்