தமிழக செய்திகள்

குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

குரங்கணி தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது. #KuranganiForestFire

சென்னை,

தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந் தேதி தீப்பிடித்தது. இதில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிக் கொண்டனர். இவர்களில் பலர் உயிருடன் மீட்கப்பட்டனர். 9 பேர் சம்பவ இடத்திலேயே பிணமானார்கள். தீக்காயம் அடைந்தவர்கள், மதுரை, கோவை, சென்னை மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். இவர்களில் 11 பேர் அடுத்தடுத்து இறந்து போனார்கள்.

இந்த நிலையில் வானகரம் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பார்கவி (26) சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இதையடுத்து, குரங்கணி காட்டுத் தீயில் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்து உள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு