தமிழக செய்திகள்

சட்டப்பேரவையில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம்

தமிழக சட்டப்பேரவையில் இன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழக சட்டப்பேரவை காலை 10 மணிக்கு தொடங்கியதும், கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். தொடர்ந்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தில் சிமெண்ட் தொழிற்சாலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ளார். இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளிக்க உள்ளார்.

தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவை விதிகள் 110-ன் கீழ் புதிய அறிவிப்புகளை இன்று வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் விவாதிக்க உள்ளனர்.

சட்டப்பேரவையில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல் துறை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது. கைத்தறி துறை அமைச்சர் காந்தி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அதற்கான பதிலுரையை வழங்க உள்ளனர்.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை