சென்னை,
தமிழக துணை முதல் அமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர் செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான உடல் பரிசோதனைக்காக ஓ. பன்னீர் செல்வம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உடல் பரிசோதனை முடிந்த பிறகு இன்று மதியமோ அல்லது மாலையோ துணை முதல்வர் வீடு திரும்புவார் என மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன. முன்னதாக, கடந்த மே 25 ஆம் தேதி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஓ . பன்னீர் செல்வம் அன்றைய தினமே டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.