தமிழக செய்திகள்

“நீட் தேர்வு விவகாரம் குறித்து சட்டமன்றம் கூடிய பிறகே முடிவு” - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தகவல்

சட்டமன்றம் கூடிய பிறகே நீட் தேர்வு விவகாரத்தில் உரிய முடிவுகள் எடுக்கப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழகத்தில் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இதன்படி மாநில கல்வி அமைச்சர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில், தமிழகத்திற்கு நீட் தேர்வு கூடாது என்றும், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையிலே மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வலியுறுத்தினார்.

இந்நிலையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம், நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் எப்போது தொடங்கப்படும் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அவர், சட்டமன்றம் கூடிய பிறகே நீட் தேர்வு விவகாரம் மற்றும் நீட் தேர்வுகான பயிற்சி வகுப்புகள் நடத்துவது உள்ளிட்ட அம்சங்கள் குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இதன் காரணமாக ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான பயிற்சிகள் கேள்விக்குறியாகி இருப்பதாக கல்வியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...