தமிழக செய்திகள்

தீபாவளி பண்டிகை; சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் - அமைச்சர் ராஜ கண்ணப்பன்

தீபாவளி பண்டிகையொட்டி சென்னையில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன என்று அமைச்சர் ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.

தினத்தந்தி

சென்னை,

குரோம்பேட்டையில் புதியதாக 17 வழித்தடங்களில் அரசு மாநகர பஸ் சேவையை போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

"போக்குவரத்து தொழிலாளர்களுகான ஊதிய பேச்சு வார்த்தை அடுத்த மாதம் தொடங்கும். கடந்த ஆட்சியில் 12 ஆயிரம் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டது.திமுக ஆட்சியில் 17,000-க்கும் அதிகமாக பஸ்கள் இயக்கப்படுகிறது. 4 ஆயிரம் புதிய மற்றும் நிறுத்தப்பட்ட சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் ஆறு இடங்களில் இருந்து 16,000 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மீண்டும் தீபாவளி முடிந்து சென்னை திரும்ப 17 ஆயிரம் பஸ்கள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் அதிகரிக்கப்படும். தமிழகத்தில் இனி ஒரே திராவிட கட்சி மட்டுமே இருக்கும். திமுக மட்டுமே இனி தமிழ்நாட்டை ஆட்சி செய்யும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்