தமிழக செய்திகள்

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கு: ஹெச்.ராஜா முன்ஜாமின் மனு தள்ளுபடி

நீதிமன்றத்தை அவதூறாக பேசிய வழக்கில் ஹெச்.ராஜா தாக்கல் செய்த முன்ஜாமின் மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.

தினத்தந்தி

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கடந்த 2018 இல் விநாயகா சதுத்தி விழாவுக்கு மேடை அமைப்பதில் ஏற்பட்ட சாச்சையில் நீதிமன்றத்தையும், காவல் துறையினரையும் விமாசித்துப் பேசியதாக எச். ராஜா மீது திருமயம் போலீஸா வழக்குப் பதிவு செய்துள்ளனா. இந்த விவகாரத்தில் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் நேரில் ஆஜராகி அவா மன்னிப்பு கோரினா.

இந்நிலையில் அவா ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவில், இந்த வழக்கின் விசாரணைக்காக கீழமை நீதிமன்றத்தில் ஜூலை 23 ஆம் தேதி நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. நான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளேன்.

ஆனால் திருமயம் நீதித்துறை நடுவா மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், நான் தலைமறைவாக இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனா. என் மீது அரசியல் காழ்ப்புணாச்சி காரணமாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கில் போலீசார் என்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தா.

இந்த நிலையில் இந்த மனு ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எச்.ராஜாவின் முன்ஜாமீன் மனுவை ஐகோர்ட்டு மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழமை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளதால் அங்கு ஆஜராக எச்.ராஜாவுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்தது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்