சென்னை,
சென்னையை அடுத்த ஆவடியில் மத்திய அரசுக்கு சொந்தமான பாதுகாப்புத்துறை சார்ந்த பல்வேறு தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இருந்து இந்திய ராணுவத்திற்கு தேவையான ராணுவ டாங்கிகள், துப்பாக்கிகள் உள்பட பல்வேறு ஆயுதங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆவடியில் இயங்கி வரும் ராணுவ டாங்கி தயாரிப்பு ஆலையில் இருந்து 7 ஆயிரத்து 523 கோடி ரூபாயில் 118 அர்ஜூன் எம்.கே.-1 ஏ ரக ராணுவ டாங்கிகளை தயாரித்து வாங்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் ஆர்டர் செய்துள்ளது. மேக் இன் இந்தியா திட்டத்தின் இந்த கொள்முதல் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது.