தமிழக செய்திகள்

பாதுகாப்பு வேளாண் மண்டலம்: முதல்-அமைச்சர் அறிவிப்பு வரலாற்று சிறப்பு வாய்ந்தது - விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் பாராட்டு

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது குறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தினத்தந்தி நிருபரிடம் கூறியதாவது:-

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற நாசக்கர திட்டங்களுக்கு எதிராக நான் சுப்ரீம் கோர்ட்டு, தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தேன்.

தற்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது மிகவும் பாராட்டுக்குரியது ஆகும். புதிதாக ஹைட்ரோ கார்பன் திட்டங்களும் செயல்படுத்த முடியாது என்பதால் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு அடைந்துள்ளோம்.

தமிழக விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியாகவும் பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளும் நாங்கள் ஆதரவாக இருப்போம். மத்திய அரசும் தமிழக அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து