தமிழக செய்திகள்

சென்னையில் ஆவின் பால் வினியோகம் செய்வதில் தாமதம் - மக்கள் பாதிப்பு

சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தினத்தந்தி

சென்னை,

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, பால் உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டம் காரணமாக ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு குறைந்துள்ளது, இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.

பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடர்ந்தால் பால் உற்பத்தியாளர்கள் தனியாரிடம் பால் விற்க முன்வருவார்கள் என்றும், இதனால் ஆவின் நிறுவனம் நலிவடைய வாய்ப்புள்ளது என்றும் பால் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை, சோழிங்கநல்லூர் பால் பண்ணையில் இன்று பால் சப்ளை செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து வரவேண்டிய பால் வரத்து குறைவின் காரணமாக உற்பத்தி மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. பால் பண்ணையில் இருந்து அதிகாலை 3 மணிக்கு புறப்பட வேண்டிய விநியோக வாகனங்கள் காலதாமதமாக சென்றதால் ஆவின் அட்டை தாரர்கள் சிரமம் அடைந்துள்ளனர்.

சோழிங்கல்லூரி ஆவின் பண்ணையில் பாலை பாக்கெட் செய்ய போதுமான இயந்திரங்கள் இல்லை. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் பால் விநியோகம் செய்வதில் தாமதம் ஏற்படும் சூழல் நிலவியுள்ளது.