சென்னை,
வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தென் தமிழக கடற்கரை பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் மாலத்தீவு பகுதியில் காற்று மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் பரவலாகவும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யும். டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெரிய அளவில் மழை இருக்காது இவ்வாறு அவர் கூறினார்.