தமிழக செய்திகள்

தமிழகத்தில் டெல்டா, ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3வது அலையாக பரவுகிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தல் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3 ம் அலையாக பரவுகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

தினத்தந்தி

சென்னை,

தமிழ்நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது.கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கையம் அதிகரித்து வருகிறது.இதனால் தமிழகத்தில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது ;

நாளை முதல் 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்க்ளுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.தடுப்பூசி போடும் பணியை நாளை முதல்- அமைச்சர் தொடக்கி வைக்கிறார் .ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி தொடங்கப்படவுள்ளது.

2ம் தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது . முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

ஒமைக்ரான் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3 முதல் 4 நாட்களிலேயே நெகடிவ் என வந்து விடுகிறது.தமிழகத்தல் டெல்டா மற்றும் ஒமைக்ரான் வைரஸ் இணைந்து 3 ம் அலையாக பரவுகிறது .

இவ்வாறு அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது