தமிழக செய்திகள்

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்த கோரிக்கை

சேதமடைந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடங்களை அப்புறப்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

காரியாபட்டி, 

காரியாபட்டி தாலுகா பணிக்கனேந்தல் கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. இந்த கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் உள்ள இடத்தில் சிறுவர்கள் விளையாடி வருகின்றனர். ஆபத்தை உணராத சிறுவர்கள் இந்த பகுதியில் அடிக்கடி விளையாடுகின்றனர். எனவே இடிந்து விடும் நிலையில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடத்தை உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோல் அல்லாளப்பேரி கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலக கட்டிடம் மிகவும் சேதமடைந்துள்ளது. இந்த கட்டிடங்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து