தமிழக செய்திகள்

செயல்விளக்கம்

வேதாரண்யத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் குறித்து செயல்விளக்கம் நடந்தது.

வேதாரண்யம் நகராட்சி சார்பில் தூய்மையே சேவை திட்டத்தின் கீழ் நகராட்சி செயல்படுத்தி வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகள் குறித்து கடை உரிமையாளர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு செயல்விளக்கம் அளிக்கபட்டது. நிகழ்ச்சிக்கு நகர் மன்ற தலைவர் புகழேந்தி தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் வெங்கடலட்சுமணன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் மணிவண்ணன் வரவேற்றார். இதில் வர்த்தக சங்க தலைவர் தென்னரசு, பொருளாளர் சீனிவாசன் உள்ளிட்ட வர்த்தக சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நகராட்சி வளம் மீட்பு மையத்திலும், நுண் உரக்கிடங்கு வளாகத்திலும் செயல்முறைகள் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட வணிகர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு உரக்கிடங்கில் தயார் செய்யப்பட்ட மாதிரி உரம் இலவசமாக வழங்கப்பட்டது. பின்னர் திடக்கழிவு மேலாண்மை வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...