தமிழக செய்திகள்

பா.ஜ.க. சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம்

காரைக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காரைக்குடி, 

மின்சார கட்டணம், பால் விலை உயர்வு உள்ளிட்ட விலைவாசி உயர்வை கண்டித்து காரைக்குடியில் பா.ஜ.க. சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நகர தலைவர் பாண்டியன் தலைமை தாங்கினார். இதையொட்டி விலைவாசி உயர்வை கண்டித்தும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.

இதில், மாவட்ட துணை தலைவர் நாராயணன், மாவட்ட பொதுச்செயலாளர் நாகராஜன், மாநில இளைஞரணி துணை தலைவர் பாண்டித்துரை, காரைக்குடி நகர பொதுச்செயலாளர் மலைக்குமார் ராஜரத்தினம், பழனி குமார், நகர துணைத் தலைவர் ஜோதிசண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.