தமிழக செய்திகள்

கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

குடவாசல்;

காவிரியில் தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசை கண்டித்து குடவாசலில் பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குடவாசல் பஸ் நிறுத்தத்தில் நேற்று மாலை பொதுமக்கள், விவசாயிகள், அனைத்து கட்சியினர், வர்த்தக சங்கத்தினர், அமைப்புசாரா தொழிலாளர் அமைப்புகள் சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கர்நாடக முதல்- மந்திரி சித்தராமைய்யா, துணை முதல்- மந்திரி சிவக்குமார் மற்றும் கர்நாடகா அரசை கண்டித்து கோஷம் எழுப்பினர். மேலும் அவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் படங்களை தீயிட்டு கொளுத்தினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த குடவாசல் போலீசார் விரைந்து சென்று தீயை அனைத்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய சங்க அமைப்புகள், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அதரவு அளித்தன.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...