தமிழக செய்திகள்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த ஊழியர்களை தனியாரிடம் ஒப்படைத்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்பந்த அடிப்படையில் 219 ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கும் வகையில் பூங்கா நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது.

இதை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பூங்காவில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் நேற்று மாலை பூங்கா இயக்குனர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா அரசு பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் ஒப்பந்த பணியாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்