எட்டயபுரம்:
தொடர் மின்வெட்டை கண்டித்து எட்டயபுரம் பா.ஜனதா கட்சியின் சார்பில் எட்டயபுரம் பட்டத்து விநாயகர் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ராம்கி தலைமை தாங்கினார். நெசவாளர் அணி மாவட்ட துணைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் ஆத்தி ராஜ், உள்ளாட்சி பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம், ஆட்டோ ஓட்டுநர் சங்க அமைப்பு செயலாளர் ராமநாதன், காளிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்