திருவொற்றியூர் தேரடி தபால் நிலையம் அருகில் எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து அமைப்பு சாரா தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் வடசென்னை கிழக்கு மாவட்ட தலைவர் கலையரசன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் எம்.எஸ்.திரவியம் முன்னிலையில் அமைப்பு சாரா தொழிலாளர் மாநிலத் தலைவர் மகேஸ்வரன் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் குல்லா அணிந்தும், கண்ணில் கருப்பு துணியை கட்டிக்கொண்டும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இதில் நிர்வாகிகள் சுகுமாறன், தேசிய மணி, அரவிந்த் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.