தமிழக செய்திகள்

ஜெயலலிதா வீட்டை ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஜெயலலிதா வீட்டை ஜெ.தீபாவிடம் ஒப்படைக்க கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடைமைகளை அவரது வாரிசுகளிடம் ஒப்படைக்க வலியுறுத்தி அம்மா தொண்டர் இயக்க தலைவர் தொண்டன் சுப்பிரமணி தலைமையில் சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் போது தொண்டன் சுப்பிரமணி கூறியதாவது:-

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வீட்டையும், தனிப்பட்ட உடைமைகளையும் அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் அந்த இல்லத்தில தொண்டர்களை பார்வையிட அனுமதிப்பார்கள்.

ஜெயலலிதா இறந்த போது, அவரது உடல் மீது போர்த்தப்பட்ட தேசிய கொடியை அவரது வாரிசுகளிடம் வழங்காததை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்