தமிழக செய்திகள்

மாயனூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைப்பு

மாயனூரில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது.

தினத்தந்தி

கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியம், மாயனூர் ஊராட்சியில் மக்கள் பணி செய்ய விடாமல் முடங்கி உள்ளதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பாக நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரை கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் மாயனூர் ஊராட்சி மன்ற தலைவர் கற்பகவல்லி ஆகியோர் நேரில் அழைத்து மாயனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் வைத்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மாயனூர் ஊராட்சியில் 15 நாட்களில் பணிகள் செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து நேற்று நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அறிவித்தனர். இந்த சமரச பேச்சுவார்த்தையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் சுப்பிரமணியன், நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து