வேளாங்கண்ணி:
பருவம் தவறிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தி அ.தி.மு.க சார்பில் திருக்குவளை தாலுகா அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு நாகை மாவட்ட எம்ஜிஆர் மன்ற மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமை தாங்கினார் .கீழையூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் வேதியன், மேற்கு ஒன்றிய செயலாளர் பாலைசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசே கொடுத்திடு ! கொடுத்திடு! விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் கொடுத்திடு. தடுத்திடு! தடுத்திடு! குடிகெடுக்கும் கஞ்சாவை தடுத்திடு. வேண்டும்! வேண்டும்! அனைவருக்கும் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி வேண்டும். தடுத்து நிறுத்து !தடுத்து நிறுத்து! கர்நாடகா மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்து. உள்ளிட்ட கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் மாவட்ட இணை செயலாளர் மீனா, மாவட்ட மகளிரணி செயலாளர் இளவரசி மற்றும் அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.