தமிழக செய்திகள்

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்றா.

தினத்தந்தி

கடலூர்:

கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வந்த டாக்டர் கரிகால் பாரி சங்கர் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு பதிலாக ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பிரபு, கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து நேற்று காலை பிரபு, கடலூர் உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு புதுநகர் போலீசார், அனைத்து மகளிர் போலீசார் மற்றும் போக்குவரத்து போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே உள்ள ஓடுகம்பட்டி கிராமத்தை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு என்ஜினீயரிங் படித்துள்ளார். பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த குரூப்-1 தேர்வில் வெற்றி பெற்று, ராணிப்பேட்டை உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக கடந்த 3 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு