தமிழக செய்திகள்

திருப்பத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது

திருப்பத்தூர் பேரூராட்சியில் வளர்ச்சி பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது

தினத்தந்தி

திருப்பத்தூர் பேரூராட்சியில் அரசு பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை செய்து வருகின்றது. இதில் குறிப்பாக திருப்பத்தூரில் கலைஞர் மேம்பாட்டு நிதியில் அறிவுசார் மையக் கட்டிடம், பேவர் பிளாக் சாலை, தார்சாலை, பூங்கா, ஊருணிகள் மேம்பாடு, வடிகால் வாய்க்கால் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இவற்றில் பல்வேறு பணிகள் முடிந்த நிலையிலும் சில பணிகளுக்கு தவணை முறையில் எழுதப்பட்ட நிலையிலும் ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்காமல் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருப்பத்தூர் பேரூராட்சியில் கடந்த சில மாதங்களாக திட்ட பணிகள் செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட காலத்திற்குள் பணிகளை முடிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்கி பேரூராட்சியில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்