தமிழக செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி

சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தைக் காண பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மதுரை,

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா வருகிற 15-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 22-ந்தேதி மீனாட்சி பட்டாபிஷேகமும், 23-ந்தேதிதிக்கு விஜயமும், 24-ந்தேதி மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாணமும், 25-ந்தேதி தேர் திருவிழாவும் நடைபெறும்.

இந்த திருவிழாவின் முக்கியமான நிகழ்வான மீனாட்சி- சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதைக்கான பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் காலை 9.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் திருக்கல்யான நிகழ்வை காணலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை சுவாமி புறப்பாடு நிகழ்வை காண பக்தர்களுக்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்