தமிழக செய்திகள்

திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை; மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் நாளை நடைபெறும் பவுர்ணமி கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு மேலாக அனைத்து வழிபாட்டு தலங்களும் பூட்டப்பட்டு பக்தர்கள் வழிபட தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பல்வேறு நிபந்தனைகளுடன் நாளை முதல் கோவிலில் பக்தர்கள் வழிபட தமிழக அரசு நேற்று அனுமதி வழங்கியது.

தமிழகம் முழுவதும் நாளை வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் உள்ளிட்டோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

திருவண்ணாமலையில் பவுர்ணமி அன்று பக்தர்கள்

கிரிவலம் செல்வது வழக்கம். ஆனால், நாளை நடைபெறும் கிரிவலத்தில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...