தமிழக செய்திகள்

2¾ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

நாகை மாவட்டத்தில் 2¾ லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

தினத்தந்தி

நாகை மாவட்டத்தில் 2 லட்சம் பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.

குடற்புழு நீக்க மாத்திரை

நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் தொடர்பான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம் வருகிற 21-ந்தேதி வரை நடக்கிறது. 1 வயது முதல் 2 வயது குழந்தைகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரை, 2 முதல் 19 வயதுடைய அனைவருக்கும் மற்றும் 20-30 வயதுடைய பெண்களுக்கு 1 மாத்திரை வழங்கப்படும்.

2 லட்சம் பேருக்கு...

அதன்படி நாகை மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமில் 1 முதல் 19 வயதுடைய 2 லட்சத்து 33 ஆயிரத்து 201 பேருக்கும், 20 முதல் 30 வயதுடைய பெண்கள் 49 ஆயிரத்து 622 பேருக்கும் என மொத்தம் 2 லட்சத்து 82 ஆயிரத்து 823 பேருக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன் வாடி மையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மூலம் குடற்புழுநீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்