தமிழக செய்திகள்

மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள்

மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது.

இளையான்குடி, 

இளையான்குடி அருகே முனைவென்றி கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் இணைந்து மாணவ. மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் அப்பாஸ் மந்திரி தலைமை தாங்கினார். முனைவென்றி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் பூமயில், மாணவ, மாணவிகளுக்கு குடற்புழுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து எடுத்துரைத்தார். மேலும் கைகளை கழுவும் முறை, சுகாதாரமற்ற உணவுகளை தவிர்த்தல் குறித்து பேசினார்.தொடர்ந்து 1500 மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சி ஏற்பாட்டினை நாட்டு நல பணி திட்ட அலுவலர்கள் அஸ்மத்து பாத்திமா, பீர் முகமது, ஷேக் அப்துல்லா ஆகியோர் செய்திருந்தனர். 

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி