தமிழக செய்திகள்

கன்னியாகுமரி தக்கலை காவல் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு - காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

மத்திய அரசின் விருதுக்கு தக்கலை காவல் நிலையத்தை பரிந்துரைக்கப் போவதாகவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

தினத்தந்தி

கன்னியாகுமரி,

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு மேற்கொண்டு காவல் நிலைய செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து வருகிறார். அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள தக்கலை காவல் நிலையத்தில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அந்த காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பதிவேடுகள், பதிவு செய்யப்பட்ட வழக்குகள் உள்ளிட்டவை குறித்து காவலர்களிடம் கேட்டறிந்த அவர், தமிழகத்தின் சிறந்த ஆய்வாளராக செயல்படுவதாக அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளர் நெப்போலியனை பாராட்டினார். மேலும் நாட்டின் சிறந்த காவல் நிலையம் என்ற மத்திய அரசின் விருதுக்கு தக்கலை காவல் நிலையத்தை பரிந்துரைக்கப் போவதாகவும் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்