தமிழக செய்திகள்

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடல்

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பள்ளி மாணவிகளுடன் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையானார்.

தினத்தந்தி

'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் சென்னை அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள கல்விசார் சிறப்பு மையத்தில் படிக்கும் மாணவ-மாணவிகளுடன் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று கலந்துரையாடினார்.அப்போது அவர், '10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் படிப்பில் அதிக ஆர்வம் செலுத்த வேண்டும். பாடங்களை ஆழ்ந்து படிக்க வேண்டும். அறிவியல் ரீதியான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்க வேண்டும்' என்று ஊக்கப்படுத்தினார்.

பின்னர் அவர், மாணவ-மாணவிகளிடம் பொது அறிவு தொடர்பான சில கேள்விகளை கேட்டு, சரியான பதில் அளித்தவர்களுக்கு தான் எழுதிய 'பெரிய கேள்விகள், சிறிய பதில்கள்' என்ற புத்தகத்தை கையெழுத்திட்டு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் சென்னை முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ், பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சண்முகவேல், தமிழ்ச்செல்வி, முன்னாள் தலைமை ஆசிரியர் சண்முக சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து