சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
தருமபுரி மாவட்டம், தொப்பையாறு அணையிலிருந்து, 5330 ஏக்கர் ஆயக்கட்டு பகுதிகளுக்கு 05.02.2026 முதல் 25.03.2026 வரை மொத்தம் 48 நாட்களுக்கு 260.061 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் தருமபுரி மற்றும் சேலம் மாவட்ட ஆயக்கட்டு பகுதிகளில் உள்ள 5330 ஏக்கர் நிலம் பாசனவசதி பெறும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.