கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சி சாதாரண கூட்டம், தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடந்தது. நகராட்சி துணைத்தலைவர் ராசையா, ஆணையாளர் பாரிஜான் மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்ற தி.மு.க. பெண் கவுன்சிலர்கள் தனலட்சுமி, மாலதி, மாரி ஆகிய 3 பேரும் தங்களது வார்டுகளில் எந்தவித வளர்ச்சி திட்ட பணிகளும் நடைபெறவில்லை என்று கூறி, கூட்ட அரங்கில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம், நகராட்சி தலைவர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட 26 தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.