சென்னை,
தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது டெல்லியில் இருந்து பாஜகவின் ஆணைக்கிணங்க திமுகவும், அதிமுகவும் ஆட்சியமைக்க திட்டமிட்டனர். மே 04- ஆம் தேதி அன்று பிற்பகல் 03.00 மணியளவில் பாஜகவின் முக்கிய தலைவர், அதிமுக மற்றும் திமுக தலைவர்களைத் தொடர்புக் கொண்டு பேசினார். விஜய் ஆட்சியமைக்கக் கூடாது என்பதில் இரு கட்சிகளும் உறுதியாக இருந்தன. இதையெல்லாம் வெளியில் சொல்லாமல் இருந்தோம்.
திமுகவின் அனைத்து கொள்கைகளையும் குப்பையில் தூக்கிப் போட்டுவிட்டு அதிமுகவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் முயற்சி செய்தார். விஜய்யை முதலமைச்சராக்கி விடக்கூடாது என அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட உதயநிதி ஸ்டாலின் கடைசியில் தோற்றுவிட்டார்.
எடப்பாடி பழனிசாமியை முதல் திமுக வெளியில் இருந்து ஆதரவு தர முடிவெடுத்தார்கள். பாஜகவின் இந்த முயற்சிக்கு கவர்னரின் மறைமுக ஒத்துழைப்பும் இருந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடாவுமான மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூருக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
உங்களுக்கு இருக்கும் பதவி ஆசையால் பின் வாசல் வழியாக ஓடிப்போய் பதவியில் ஒட்டிக்கொண்டீர்கள் என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். காங்கிரஸ் தனித்து நின்று வெற்றி பெற்று அமைச்சராவதற்கு உலகம் இருக்கும் வரை வாய்ப்பில்லை. திமுக தோளில் ஏறி வெற்றி பெற்றுவிட்டு, அதிமுகவும் திமுகவும் இணைந்து பதவிக்கு வர பாஜக உதவி செய்ததாக சொன்னதை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்றார்.