தமிழக செய்திகள்

கரூர் கலாட்டா...! கூட்டணி பேச்சுவார்த்தையில் அமைச்சரை ஒருமையில் பேசினாரா ஜோதிமணி எம்.பி...?

குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

கரூர்:

கரூர் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கரூர் மாநகராட்சி மற்றும் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சிகளுக்கான வார்டு ஒதுக்கீடு குறித்து தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அமைச்சரும், மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் கரூர் தொகுதி எம்.பி. ஜோதிமணி மற்றும் மாவட்ட தலைவர் சின்னசாமி ஆகியோர் பங்கேற்றனர்.

முதலில் அரவக்குறிச்சி பேரூராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போது ஒரு வார்டு மட்டுமே காங்கிரசுக்கு ஒதுக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு காங்கிரஸ் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து குளித்தலை நகராட்சி வார்டு ஒதுக்கீடு குறித்த பேச்சுவார்த்தையின் போதும் காங்கிரசுக்கு குறைந்த வார்டு ஒதுக்க முடிவு செய்யப்பட்டு அறிவிப்பும் வெளியானது. இதனால் ஆத்திரம் அடைந்த ஜோதிமணி எம்.பி., அமைச்சர் செந்தில்பாலாஜியை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு அரவக்குறிச்சி ஒன்றிய தி.மு.க. செயலாளர் மணிவண்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்து, ஜோதிமணி எம்.பி.யை கண்டித்தார். ஒரு அமைச்சரை இப்படி பேசலாமா? என்று கேட்டார்.

அப்போது இந்த கூட்டத்தில் இருந்து ஜோதிமணி எம்.பி. வெளியேறினார். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தி.மு.க. அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த அவர், உங்க ஆபிசுக்கு வந்து இருக்கேன். எப்படி நீங்க வெளிய போ அப்படினு சொல்லலாம். விருந்துக்கா வந்துருக்கேன்.மரியாதை இல்லாம பேசுறீங்க. நான் என்ன இவங்க வீட்டுக்கா வந்து இருக்கேன். வெளியே போன்னு சொல்றதுக்கு என்று சொல்ல

அருகில் இருந்த கட்சியினர் ஜோதிமணி எம்பியை சமாதானப்படுத்தி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் கரூரில் மட்டுமல்ல, அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்