தமிழக செய்திகள்

கழிவறையில் தவறி விழுந்து பெண் சாவு

கழிவறையில் தவறி விழுந்து பெண் சாவு

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே மொளசி அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 40). இவருடைய மகள் வித்தியா ஸ்ரீ (19). இந்த நிலையில் மல்லிகா கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் கோபித்து கொண்டு தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்ற மல்லிகா அங்கு தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு மொளசி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்று பின்னர் மேல்சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் வழியிலேயே மல்லிகா இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து மல்லிகாவின் அண்ணன் கன்னியப்பன் மொளசி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சந்திரகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை