தமிழக செய்திகள்

திருச்செங்கோடு அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி சாவு

திருச்செங்கோடு அருகே மின்சாரம் தாக்கி தச்சு தொழிலாளி சாவு

தினத்தந்தி

எலச்சிபாளையம்:

சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 70). தச்சு தொழிலாளி. இவர் திருச்செங்கோடு அருகே பாண்டீஸ்வரர் கோவிலில் தங்கி அப்பகுதியில் தச்சு வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று பாண்டீஸ்வரர் கோவில் பின்புறம் ஜெகதீசன் என்பவருடைய வீட்டில் முருகேசன் பராமரிப்பு பணியை செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டில் உள்ள தகரத்தில் இருந்து மின்சாரம் தாக்கி முருகேசன் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முருகேசன் இறந்தார். இதுகுறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்