தமிழக செய்திகள்

மோகனூர் காவிரி ரெயில் பால பகுதியில் ஆண் பிணம் யார் அவர்? போலீசார் விசாரணை

மோகனூர்:

மோகனூரில் இருந்து வாங்கல் செல்லும் காவிரி ஆற்றின் ரெயில்வே பாலத்தின் கீழ் பகுதியில் அழுகிய நிலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் சுமதிக்கு தகவல் கிடைத்தது. அவர் இதுகுறித்து மோகனூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பூர்ணிமா அங்கு இறந்து கிடந்த ஆண் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து பேலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...