தமிழக செய்திகள்

நண்பர்களுடன் குளித்தபோதுசின்னாறு அணையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் சாவு

பாலக்கோடு:

பஞ்சப்பள்ளி அருகே நண்பர்களுடன் குளித்தபோது சின்னாறு அணையில் மூழ்கி 10-ம் வகுப்பு மாணவர் இறந்தார்.

பள்ளி மாணவர்

தர்மபுரி மாவட்டம் பஞ்சப்பள்ளி அருகே உள்ள ஜில்திம்மனூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவருடைய மகன் திவாகர் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

தற்போது பள்ளிக்கூடத்தில் அரையாண்டு விடுமுறை விட்ட நிலையில் திவாகர் நேற்று தனது நண்பர்களுடன் சின்னாறு அணை பகுதிக்கு குளிக்க சென்றார். அங்கு நண்பர்களுடன் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்த திவாகர் திடீரென தண்ணீரில் மூழ்கினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். ஆனால் அவர்களால் திவாகரை காப்பாற்ற முடியவில்லை.

விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பஞ்சப்பள்ளி போலீசார் தண்ணீரில் மூழ்கி இறந்த திவாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பேலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நண்பர்களுடன் குளிக்க சென்ற பள்ளி மாணவர் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...