தமிழக செய்திகள்

தளி அருகேமோட்டார் சைக்கிள்கள் மோதி வாலிபர் சாவு

தினத்தந்தி

தேன்கனிக்கோட்டை:

கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே உள்ள பெள்ளுர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு மதகொண்டப்பள்ளி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள வேடம்பட்டி கிராமத்தை சேர்ந்த உதய்குமார் (19), முத்துவேல் (19) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்தனர். அங்குள்ள பள்ளி சாலை அருகே வந்தபோது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதி கொண்டன. இதில் உதய்குமார் தூக்கி வீசப்பட்டு தலை மற்றும் மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த வெங்கடேசை போலீசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்