தமிழக செய்திகள்

காவேரிப்பட்டணம் அருகேதண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணம் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து குழந்தை பலியானது.

குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மூலிக்கண் சவுளூர் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம். இவருக்கு 1 வயதில் மவுலி என்ற மகன் இருந்தான். நேற்று முன்தினம் மவுலி வீட்டுக்கு அருகில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது பழனி என்பவருக்கு சொந்தமான தரைமட்ட தண்ணீர் தொட்டி அருகே அவன் சென்றான். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டியில் மவுலி தவறி விழுந்தான். இதில் தண்ணீரில் மூழ்கி மவுலி பரிதாபமாக இறந்தான்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காவேரிப்பட்டணம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...