தமிழக செய்திகள்

தினகரன் வக்கீல் கொடுத்த பென்டிரைவில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகள் அடங்கிய 4 வீடியோக்கள் உள்ளன

தினகரன் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் கொடுத்த பென்டிரைவில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகள் அடங்கிய 4 வீடியோக்கள் உள்ளன. #Sasikala #Jayalalithaa

தினத்தந்தி

சென்னை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த விசாரணை கமிஷன் பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.

தி.மு.க சார்பில் மருத்துவர் சரவணன், ஜெயலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், அரசு டாக்டர்கள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரும் நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் ஆஜராகி விளக்கம் அளித்து உள்ளனர். இவர்களைத் தொடர்ந்து, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா இன்று சென்னை சேப்பாக்கம் கலச மகாலில், நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன்பு ஆஜரானார்.

விசாரணை ஆணையம் சார்பில் ஆஜராக சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. விரைவில் சசிகலா விசாரணை ஆணையம் முன்பு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்டது . இந்த நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் சசிகலா சார்பில், வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜராவார் என்றும் சசிகலா ஆஜராக மாட்டார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது வரும் 8ம் தேதிக்குள் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளதாக ராஜா செந்தூர்பாண்டியன் தகவல் தெரிவித்து உள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தினகரன் சார்பாக வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் ஆஜரரானார்.

ஜெயலலிதா சிகிச்சை பெறும் வீடியோ ஆதாரங்கள் அடங்கிய பென் டிரைவை, விசாரணை ஆணையத்தில் ஒப்படைத்தார் ராஜா செந்தூர்பாண்டியன். ஜெயலலிதா தொடர்பான தகவல்கள் பென்டிரைவில் இருக்கலாம் என தகவல் வெளியானது

இது குறித்து விசாரணை ஆணையம் கூறி இருப்பதாவது:-

ராஜா செந்தூர்பாண்டியன் கொடுத்த பென்டிரைவில், ஜெயலலிதா சிகிச்சை பெற்ற காட்சிகள் அடங்கிய 4 வீடியோக்கள் உள்ளன. அப்பல்லோ மருத்துவமனை வரும் 5ம் தேதிக்குள் ஆதாரங்களை தாக்கல் செய்ய வேண்டும். என கூறப்பட்டு உள்ளது.

#RajaSenthoorPandian | #JayaHospitalVideo | #Arumugasamy | #Ttvidhinakaran | #Tamillatestnews

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்