தமிழக செய்திகள்

கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டிருந்த தினகரன் கோரிக்கையை நிராகரித்தது தேர்தல் கமிஷன்

கூடுதல் ஆவணம் தாக்கல் செய்ய அவகாசம் கேட்டிருந்த தினகரன் கோரிக்கையை தேர்தல் கமிஷன் நிராகரித்துள்ளது.

புதுடெல்லி,

அ.தி.மு.க. அணிகள் இண்டாகப் பிரிந்து, இரட்டை இலை சின்னத்திற்கு இரு அணிகளும் உரிமை கோரியதால், கடந்த ஆண்டு கட்சியின் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதனையடுத்து, இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக சசிகலா, தினகரன் ஆகியோர் ஒரு தரப்பாகவும், மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம் ஒரு தரப்பாகவும் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இதற்காக பிரமாணப் பத்திரங்கள் மற்றும் ஆவணங்களையும் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், அக்டோபர் 31-ம் தேதிக்குள் இரட்டை இலை சின்ன வழக்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில், செப்டம்பர் 29-ம் தேதிக்குள் இரு தரப்பினரும் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்யும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

இதற்கிடையே தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் தவிர, இரு அணிகளும் இணைந்து பொதுக்குழு கூட்டத்தை நடத்தி முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றின. இந்த தீர்மான நகல்கள் மற்றும் கூடுதல் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். அதில், பெருவாரியான எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் மற்றும் நிர்வாகிகள் தங்கள் வசம் இருப்பதால் கட்சியின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்த அனுமதிக்கும்படி கூறியிருந்தனர்.

இந்நிலையில் தேர்தல் ஆணையம் கேட்ட கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்வதற்கு மேலும் 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும் என தினகரன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது. ஆனால், டிடிவி தினகரன் தரப்புக்கு அவகாசம் அளிக்க தேர்தல் கமிஷன் மறுத்துவிட்டது. இரட்டை இலைச்சின்னம் தொடர்பான விசாரணை திட்டமிட்டபடி வரும் அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்