தமிழக செய்திகள்

தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

குண்டும், குழியுமான தார்சாலை

அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், கீழ மைக்கேல்பட்டி கிராம தார்சாலை மிகவும் மோசமான நிலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

திவாகர், கீழமைக்கேல்பட்டி.

குடிநீர் இன்றி மக்கள் அவதி

அரியலூர் மாவட்டம், அங்கராயநல்லூர் பஞ்சாயத்து, உத்திரக்குடி கிராமத்தில் உள்ள சேவை மையம் அருகில் பொது குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனை தனிநபர் ஒருவர் தனது வீட்டுக்கு மட்டும் தண்ணீரை திறந்து பயன்படுத்தி வருகிறார். இதனால் பொதுமக்கள் தண்ணீர் இன்றி பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், உத்திரக்குடி.

மூடப்படாத கழிவுநீர் வாய்க்கால்கள்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகர பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் அனைத்தும் ஸ்லாப் கொண்டு மூடப்படாமல் உள்ளதால் அவற்றில் இருந்து துர்நாற்றம் வருவதுடன், அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி இப்பகுதி மக்களை இரவு நேரத்தில் கடித்து தொல்லை கொடுத்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் தூக்கம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

நவீன கழிப்பிட வசதி வேண்டும்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் புதிய பஸ் நிலையத்திற்கு ஏராளமான பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். இந்த பஸ் நிலையத்தில் இலவச நவீன கழிப்பிட வசதி இல்லாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்

பொதுமக்கள், ஜெயங்கொண்டம்.

எரியாத தெருவிளக்குகள்

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டியை அடுத்த அஸ்தினாபுரம் ஊராட்சி நடுதெருவில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நடுத்தெருவில் சுமார் 10-க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் இரவு நேரத்தில் எரியாமல் உள்ளது. இதனால் தெருமுழுவதும் இருள் சூழ்ந்து இருப்பதால் தெருவில் நடந்து செல்லும் போது விஷஜந்துக்கள் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. மேலும் இருளை பயன்படுத்தி சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

பொதுமக்கள், அஸ்தினாபுரம்.