தமிழக செய்திகள்

'தினத்தந்தி' செய்தி எதிரொலி: சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க பணி ஆணை

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க பணி ஆணை வழங்கப்பட்டது.

தினத்தந்தி

கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுப்பட்டி ஊராட்சியில் 100 வீடுகள் கொண்ட சமத்துவபுரம் உள்ளது. இங்குள்ள வீடுகள் மிகவும் சேதம் அடைந்து உள்ளதால் அங்கு வசிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து 'தினத்தந்தி' நாளிதழில் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி செய்தி வெளியிடப்பட்டு இருந்தது.

இந்தநிலையில் நேற்று நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளை பழுது பார்க்க ஒவ்வொரு வீடுகளுக்கும் ரூ.23 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை பணி ஆணை வழங்கப்பட்டது. இதையடுத்து, செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்