தமிழக செய்திகள்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் காமராஜர் அணையில் மூழ்கி 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தினத்தந்தி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூரில் காமராஜர் நீர்த்தேக்கம் உள்ளது. இந்த நீர்தேக்கத்திற்கு விடுமுறை நாட்களில் சிறுவர்கள், குடும்பங்கள் சென்று நீர்த்தேக்கத்தை கண்டு ரசிப்பதும், அங்கு குளிப்பதும் வழக்கமான விஷயம்.

அந்த வகையில், ஆத்தூர் பகுதியை சார்ந்த நண்பர்களான நாகராஜ், லோகு, செல்வபரணி, பரத், சாரதி பிரபாகரன் ஆகிய 5 சிறுவர்கள் இன்று நீர்தேக்கத்திற்கு சென்றுள்ளனர். அங்கு அனைவரும் நீரில் குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக 5 சிறுவர்களும் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில், நீரில் மூழ்கிய அவர்கள் காப்பாற்றுமாறு கூச்சலிட்டனர். சிறுவர்களின் அலறலை சத்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மீட்பு படையினர் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் 5 பேரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

இதையடுத்து போலீசார் மற்றும் மீட்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். நீண்ட போராட்டத்துக்கு பிறகு மீட்பு படையினர் 5 பேர் சிறுவர்களின் உடலை மீட்டனர்.

அணையில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு