திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே, சக்கையநாயக்கனூரை சேர்ந்தவர் பாண்டி (70). இவரது மனைவி மீனாட்சி (65). இவர்களுக்கு சுருளி (வயது 45) என்ற மகன் உள்ளார்.
இதனிடையே, நிலம் மற்றும் சொத்துகேட்டு பெற்றோரிடம் சுருளி அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், சொத்து கேட்டு பெற்றோர் பாண்டி, மீனாட்சியிடம் நேற்று இரவு சுருளி மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரடைந்த சுருளி தான் வைத்திருந்த அரிவாளால் தந்தை பாண்டி, தாயார் மீனாட்சி ஆகிய இருவரையும் சரமாரியாக வெட்டினார்
இதில் படுகாயம் அடைந்த பாண்டி, மீனாட்சி இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் பாண்டி சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
பெற்றோரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிய சுருளியை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.