சென்னை,
டெட் தேர்வில் ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் குறைப்பு, உதவித்தொகை உயர்வு உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பட்டதாரிகள் சங்கம் சார்ப்பில் கடந்த 10 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மாற்றுதிறனாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அண்டை மாநிலமான ஆந்திராவை போன்று தமிழகத்திலும் உதவித்தொகை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
ரூ.1,500 ரூ .2,000 வரையிலான மாத உதவித்தொகையை ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளனர். உதவித்தொகை வேண்டி பல ஆண்டுகளாக ஏராளமானோர் காத்திருப்பதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.