தமிழக செய்திகள்

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

கிணத்துக்கடவில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தினத்தந்தி

கிணத்துக்கடவு பஸ் நிலையத்தில் தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு தாசில்தார் சிவக்குமார் தலைமை தாங்கினார். தீயணைப்பு நிலைய அதிகாரி தங்கராஜ் முன்னிலை வகித்தார். தலைமை இடத்து துணை தாசில்தார் செல்லத்துரை வரவேற்றார்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு துறை அதிகாரிகள் பேசுகையில்,

வடகிழக்கு பருவமழை காலம் நெருங்கி விட்டதால், மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மின்னல் தாக்கும் போது மரங்களின் கீழ் நிற்க கூடாது. மழை வெள்ளம் செல்லும் பகுதிகளில் நடக்க கூடாது. மின்கம்பங்கள் அருகில் செல்லக்கூடாது. தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் என்றனர்.

மேலும் மீட்பு உபகரணங்களை பேரிடர் காலங்களில் பயன்படுத்தும் விதம் குறித்தும், மீட்பு நடவடிக்கையில் ஈடுபடும் விதம் குறித்தும் பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து