தமிழக செய்திகள்

கொற்கை அகழாய்வில் திரவ பொருள் வடிகட்டும் 9 அடுக்கு குழாய் கண்டுபிடிப்பு

கொற்கை அகழாய்வில் திரவ பொருள் வடிகட்டும் 9 அடுக்கு குழாய் கண்டுபிடிப்பு.

தூத்துக்குடி,

பண்டைய தமிழர்களின் நாகரிக தொட்டிலாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூர், ஏரல் அருகே சிவகளை, கொற்கை ஆகிய இடங்களில் தமிழக அரசின் சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான முதுமக்கள் தாழிகள், பழங்கால மண்பாண்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது. கொற்கையில் 17 குழிகள் தோண்டப்பட்டு, அகழாய்வு நடந்து வருகிறது. இங்கு பழங்காலத்தில் சங்கு அறுக்கும் தொழிற்சாலை இருந்ததும், 10 அடுக்கு செங்கல் கட்டுமானம் இருந்ததும் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கொற்கை அகழாய்வில், ஒரு குழியில் திரவ பொருட்கள் வடிகட்டும் குழாய் பல அடுக்குகளாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது 9 அடுக்குகளாக கண்டறியப்பட்ட இந்த குழாய் முழுவதையும் அகழ்ந்தெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மற்றொரு குழியில் முழுமையான மண்பானையும், அதன் அருகில் 3 சங்குகளும், குறியீடுகளுடன் கூடிய பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அகழாய்வு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை