தமிழக செய்திகள்

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றில் ஐம்பொன்சிலை கண்டெடுப்பு

பொன்னேரி அருகே ஆரணி ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டில் ஐம்பொன்சிலையை கண்டெடுத்த பொதுமக்கள் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.

தினத்தந்தி

ஐம்பொன் சிலை

பொன்னேரி அருகே ஆலாடு கிராமம் வழியாக ஆரணி ஆறு செல்கிறது. இதன் குறுக்கே லட்சுமிபுரம் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் நேற்று சிறுவர்கள் சிலர் குளித்துக் கொண்டிருந்தபோது, ஆற்றில் சாமி சிலை ஒன்று கிடப்பதை கண்டு அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர். சாமி சிலையை வெளியே எடுத்து பார்த்தபோது, 1 அடி கொண்ட ஐம்பொன் அம்மன் சிலை என்பது தெரியவந்தது.

தாசில்தாரிடம் ஒப்படைப்பு

இச்செய்தி காட்டு தீ போல் வேகமாக பரவிய நிலையில், அம்மன் சிலை அருகே உள்ள நெல்லூர் அம்மன் கோவிலில் வைத்து பொதுமக்கள் வழிபட ஆரம்பித்துவிட்டனர். தகவல் அறிந்து வந்த பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னதுரை, சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் விசாரணை செய்த நிலையில் வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் பொன்னேரி வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் பொதுமக்கள் உதவியுடன் பொன்னேரி தாசில்தார் செல்வகுமாரிடம் அம்மன் சிலையை ஒப்படைத்தனர். ஆரணி ஆற்றின் அணைக்கட்டில் ஐம்பொன் சிலை கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு

காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை